/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மண் ரோடால் அல்லல்; தெருவில் தேங்கும் கழிவுநீர் ஒத்தையால் இந்திரா காலனி மக்கள் அவதி
/
மண் ரோடால் அல்லல்; தெருவில் தேங்கும் கழிவுநீர் ஒத்தையால் இந்திரா காலனி மக்கள் அவதி
மண் ரோடால் அல்லல்; தெருவில் தேங்கும் கழிவுநீர் ஒத்தையால் இந்திரா காலனி மக்கள் அவதி
மண் ரோடால் அல்லல்; தெருவில் தேங்கும் கழிவுநீர் ஒத்தையால் இந்திரா காலனி மக்கள் அவதி
ADDED : ஜூன் 27, 2025 12:35 AM

சாத்துார: சாத்துார் ஊராட்சி ஒன்றியம் ஒத்தையால் ஊராட்சியில் உள்ள இந்திரா காலனியில் அடிப்படை வசதிகளான ரோடு, வாறுகால், கழிப்பறை உள்ளிட்ட வசதி இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்திரா காலனிக்கு செல்லும் ரோடு மண் ரோடாக உள்ளது. ரோட்டின் அருகில் உள்ள கழிவுநீர் செல்லும் வாறுகாலில் இருந்து வழியும் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்பதால் ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
காலனியில் உள்ள தெருக்களில் ஆங்காங்கே சிமென்ட் ரோடு போடப்பட்டு உள்ளது. இந்த ரோடும் ஏற்ற இறக்கமாக உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்திரா காலனியில் இருந்து புது சூரங்குடிக்கு செல்லும் ரோடு சேதம் அடைந்த நிலையில் உள்ளது.
இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பள்ளம் காரணமாக தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். காலனி பகுதியில் ஆண், பெண்களுக்காக கட்டப்பட்ட பொது சுகாதார வளாகம் செயல்படாத நிலையில் உள்ளது.
காலனியில் வினியோகமாகும் குடிநீர் உப்பு சுவையோடு இருப்பதால் வாகனங்களில் விற்கப்படும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
பலர் தெருக்களை ஆக்கிரமித்து படிகள் கட்டி உள்ளனர். இதனால் வாறுகால் கட்டுவதற்கு போதுமான இடவசதி இன்றி வளர்ச்சி பணிகள் தடைபட்டு வருகின்றன.
சுகாதாரக் கேடு
ராஜபாண்டியன், கூலித்தொழிலாளி: வாறுகால் துார்வாரப்படுவதில்லை. மக்களே செய்கின்றனர். கூடுதலான துப்புரவு பணியாளர்களை நியமித்து இப்பணிகளை செய்தால் மட்டுமே சுகாதார கேட்டிற்கு தீர்வு ஏற்படும்.
புதர்மண்டிய வளாகம்
கருப்பசாமி, கூலித்தொழிலாளி: ஊராட்சியில் மூன்று இடங்களில் பொது சுகாதார வளாகங்களை கட்டித் தந்துள்ளனர். ஆனால் இதை பராமரிப்பதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் இவை தற்போது புதர் மண்டி காணப்படுகிறது.
ரோடு வசதி தேவை
மகேந்திரன், கூலித்தொழிலாளி: காலனிக்கு செல்லும் பிரதான ரோடு மண் ரோடாக உள்ளது. மழைக்காலத்தில் கழிவு நீரும், மழை நீரும் சேர்ந்து பாதையில் நிற்கிறது. வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.
கொசுக்கடியால் அவதி
காளிமுத்து, கூலித்தொழிலாளி: காலனியில் காலியாக உள்ள இடங்களில் குப்பை கொட்டப்படுகின்றன. கழிவுநீர் முறையாக செல்லாததால் வாறுகாலில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதில் அதிக அளவு கொசு உற்பத்தி ஆகிறது.