/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மண் ரோடு, திறந்த வெளி கழிப்பறை, ரேஷனுக்காக அலைச்சல்
/
மண் ரோடு, திறந்த வெளி கழிப்பறை, ரேஷனுக்காக அலைச்சல்
மண் ரோடு, திறந்த வெளி கழிப்பறை, ரேஷனுக்காக அலைச்சல்
மண் ரோடு, திறந்த வெளி கழிப்பறை, ரேஷனுக்காக அலைச்சல்
ADDED : நவ 28, 2024 04:46 AM
ராஜபாளையம்: மண் ரோடு, திறந்த வெளி கழிப்பறை, ரேஷனுக்காக அலைச்சல், குப்பைகள் எரிப்பு போன்ற பிரச்சனைகளால் ராஜபாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் மலையடிப்பட்டி கிழக்குப் பகுதியான எம்.ஜி.ஆர் நகரில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை சப்ளை ஆகிறது.
ரயில்வே நிலப் பிரச்சினையால் ரோடு வசதி இல்லாமல் குடிநீர் லாரிகளும் நுழைவதற்கு சிக்கல் உள்ளது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் குடியிருப்புகளுக்கு முறைப்படி பட்டா அடிப்படை வசதி தருவதாக வாக்குறுதி மட்டும் கிடைத்து வசதிகள் முழுமையாக வந்து சேரவில்லை.
ரேஷன் கடைக்கு அலைச்சல்
சுப்பிரமணியன், குடியிருப்பாளர்: குடியிருப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு வயதானோர், பெண்கள் செல்ல சிரமப்படுகின்றனர்.
குடியிருப்பு அருகே அமைக்க வேண்டும்.
பாதுகாப்பின்றி திறந்தவெளி
இந்திரா செல்வி, குடியிருப்பாளர்: அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் மகளிருக்கு பொது சுகாதார வளாக வசதி இல்லை. வேறு வழி இன்றி மலைப் பகுதியிலும் ரயில்வே தண்டவாளங்களிலும் திறந்தவெளியாக உபயோகிக்கும் நிலை உள்ளது.
ஆம்புலன்ஸ் வர யோசனை
காளீஸ்வரி, குடியிருப்பாளர்: குடியிருப்பு அருகே ரயில்வே நிலம் உள்ளதால் ரோடு வசதி தவிர்க்கப்படுகிறது. மண் ரோடாக உள்ளதால் ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூட அவசரத்திற்கு வர தயங்குகின்றனர்.
குப்பை குவித்து எரிப்பு
ஜீவா, குடியிருப்பாளர்: இப்பகுதி வீடுகளில் குவியும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவது இல்லை. தெருவோர பகுதிகளில் குவித்து எரிக்கும் நிலை உள்ளது. இதனால் சுவாசக் கோளாறு தொற்று பிரச்சனை ஏற்படுகிறது. முறையாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.