/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 12, 2025 06:26 AM

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலகம் முழுமையாக செயல்பட வேண்டும். நிரந்தர பேட்டரி வாகனம் இயக்க வேண்டும். தண்டுவடம் பாதித்த 72 மாற்றுத்திறனாளிகளில் 20 பேருக்கு மட்டும் மருத்துவ கிட் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் முகாம் நடத்தி கிட் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
செயலாளர் நாகராஜ், தலைவர் நடராஜன், பொருளாளர் அன்புச் செல்வன், துணைத் தலைவர்கள் குமரேசன், அய்யக்காள், சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.