ADDED : செப் 08, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவு மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் ராஜபாளையம் ரிதம் சிறப்பு பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளதற்கு பள்ளி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விருதுநகரில் நடந்த போட்டிகளில் 19 மாணவர்கள் பங்கேற்றனர். 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் முனியசாமி, கனிமொழி முதலிடம், குண்டு எறிதலில் பிரபா, டேவிட் சாம்ராஜ், அமலா மாநில அளவு போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மொத்தம் எட்டு மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
பள்ளி மேனேஜிங் டிரஸ்டி கதிரேசன், செயலாளர் பால்ராஜ் உறுப்பினர்கள் கோடியப்பன் உள்ளிட்ட ஆசிரியர்கள் வாழ்த்தினர்.