/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒரு லிட்டர் ஆவின் பால் விற்பனை இல்லாததால் ஏமாற்றம்; மாதமாக கிடைக்காததால் வாடிக்கையாளர் விரக்தி
/
ஒரு லிட்டர் ஆவின் பால் விற்பனை இல்லாததால் ஏமாற்றம்; மாதமாக கிடைக்காததால் வாடிக்கையாளர் விரக்தி
ஒரு லிட்டர் ஆவின் பால் விற்பனை இல்லாததால் ஏமாற்றம்; மாதமாக கிடைக்காததால் வாடிக்கையாளர் விரக்தி
ஒரு லிட்டர் ஆவின் பால் விற்பனை இல்லாததால் ஏமாற்றம்; மாதமாக கிடைக்காததால் வாடிக்கையாளர் விரக்தி
ADDED : அக் 29, 2025 08:07 AM

மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் 145 உள்ளன. இதில் தற்போது நுாறு சங்கங்களே செயல்பட்டு வருகிறது. தீவன விலை பல மடங்கு உயர்ந்தது, பாலுக்கான பணப்பட்டுவாடா தாமதம் போன்றவை முக்கிய காரணமாக உள்ளன. இந்நிலையில் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் இருந்து கடைகளுக்கு 2 மாதங்களாக ஒரு லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுவதில்லை. சுபநிகழ்ச்சிகளான திருமண நிகழ்வுகளுக்கு இந்த ஒரு லிட்டர் பாலை நிறைய பேர் வாங்குவர். அதே போல் சிறு கடைகளுக்கு வாங்கி மக்களுக்கு விற்பர். இந்நிலையில் வினியோகிக்கப்படாமல் இருப்பது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் பலரும் ஆவின் பாலை வாங்குவதை நிறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இயங்கி வரும் பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உற்பத்தியாளர்களுக்கு முழுமையான போனஸ் வழங்கப்படவில்லை. குறிப்பாக ராஜபாளையம், வத்திராயிருப்பு போன்ற லாபகரமாக இயங்கக் கூடிய பால் சங்கங்களில் கூட இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மாவட்ட பால் வளத்துறை, ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியை அதிகப்படுத்தி ஆவின் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்.
இந்திய கம்யூ. மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் கூறியதாவது: சங்கங்கள் நலிவுற்று வருவதற்கு, மாவட்ட துணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு லிட்டர் பாலுக்கு அரசு வழங்கிய ஊக்கத்தோகை ரூ.3 காலதாமதம் செய்து வழங்குவது தான் காரணம். 2 மாதங்களாக ஒரு லிட்டர் பால் வரவில்லை. வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடைகளுக்கு ஒரு லிட்டர் பால் கேட்டு ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்,என்றார்.இது குறித்து கேட்க ஆவின் பொதுமேலாளருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை எடுக்கவில்லை.

