/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிரதான் மந்திரி திட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கல்
/
பிரதான் மந்திரி திட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கல்
பிரதான் மந்திரி திட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கல்
பிரதான் மந்திரி திட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கல்
ADDED : மார் 17, 2024 12:27 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 79.86 லட்சத்தில் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கல், தாட்கோ மூலம் பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா, முதல்வரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தில் மொத்தம் 232 பயனாளிகளுக்கு ரூ. 1. 52 கோடி மானியத் தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ., சீனிவாசன், நகராட்சித் தலைவர் மாதவன், ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், தாட்கோ மேலாளர் ரஞ்சித் உள்பட பலர் பங்கேற்றனர்.