/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாரணாபுரத்தில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையத்தால் அதிருப்தி
/
நாரணாபுரத்தில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையத்தால் அதிருப்தி
நாரணாபுரத்தில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையத்தால் அதிருப்தி
நாரணாபுரத்தில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையத்தால் அதிருப்தி
ADDED : ஜூலை 03, 2025 03:08 AM

சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரத்தில் புறக் காவல் நிலையம் பூட்டியே கிடப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட நாரணாபுரம் பகுதியில் சிறு சிறு சம்பவங்கள். தகராறு அடிக்கடி நடைபெறும். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசாரின் கண்காணிப்பில் இருப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
ஒரு சில நாட்கள் மட்டுமே போலீசார் வந்து பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது பூட்டியே கிடக்கிறது. இதனால் தற்போதும் இப்பகுதியில் சிறு சிறு திருட்டு சம்பவங்கள், தகராறு அடிக்கடி நடக்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் இருப்பதோடு அதிருப்தியில் உள்ளனர்.
எனவே இங்கு 24 மணி நேரமும் போலீசார்தங்கி புறக்காவல் நிலையம் செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.