ADDED : மே 24, 2026 11:39 PM

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நான்கு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட மழை நீர் வடிகாலுக்கான பாலம் செயல்பாட்டிற்கு வராததால் வாகன ஓட்டிகள் தவிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் நகராட்சி 25 வது வார்டு மலையடிபட்டி மெயின் ரோட்டில் இருந்து சத்திரப்பட்டி ரோடு செல்வதற்கான சாலையில் குறுகலாக உள்ள மழை நீர் வடிகால் பாலத்தை புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக நகராட்சி பொது நிதி ரூ 10 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் பாலப்பணி ஜனவரி மாதம் தொடங்கியது.
இதற்காக பிரதான ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
இதனால் இவ்வழியே செல்லும் பஸ்கள் மாற்றுப் பாதையில் சென்று வருவதால் நீண்ட துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வடிகால் பாலம் பணிகள் முடிந்து 15 நாட்களுக்கு முன் பாலத்தின் இரண்டு பக்கமும் மண் கொட்டி வைத்துள்ளனர். இதனால் ஆட்டோ டூவீலர் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் மட்டும் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றன.
பால பணிகளை முடித்தும் இணைப்பு சாலை பணிகளை முடிக்காததால் பஸ் உள்ளிட்ட கனரா வாகனங்கள் இப்பகுதியில் சென்று வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
அதிகாரிகள் தலையிட்டு பால இணைப்புக்கான ரோடு பணிகளை முடித்து உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி என கோரிக்கை விடுத்துள்ளனர்.
