/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தாமதிக்கும் மாவட்ட நிர்வாகம் ரூ.5.67 கோடி ஒதுக்கியும் மந்த நிலை
/
பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தாமதிக்கும் மாவட்ட நிர்வாகம் ரூ.5.67 கோடி ஒதுக்கியும் மந்த நிலை
பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தாமதிக்கும் மாவட்ட நிர்வாகம் ரூ.5.67 கோடி ஒதுக்கியும் மந்த நிலை
பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தாமதிக்கும் மாவட்ட நிர்வாகம் ரூ.5.67 கோடி ஒதுக்கியும் மந்த நிலை
ADDED : செப் 19, 2025 01:53 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 2021ல் நடந்த சாத்துார் அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும் அதை நிறைவேற்ற தாமதம் ஏற்பட்ட நிலையில், ஆக. மாதம் அரசு ரூ.5.67 கோடி நீதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பசுமை தீர்ப்பாய கோர்ட்டில் தெரிவித்தது. ஒதுக்கிய பணத்தை தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்காமல் மாவட்ட நிர்வாகம் தாமதித்து வருகிறது.
மாவட்டத்தில் 2021 பிப். 12ல் நடந்த சாத்துார் அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலை விபத்தில் 27 பேர் பலியாகினர். இதில் 26 பேர் வரை காயமடைந்தனர். 2022ல் பசுமை தீர்ப்பாயம் பலியானவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு சதவீதங்களுக்கு ஏற்ப ரூ.2 முதல் 15 லட்சம் வரை வழங்க உத்தரவிட்டது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதில் 10 சதவீதம் மத்திய அரசு, 10 சதவீதம் மாநில அரசு வழங்க வேண்டும். மீதம் 80 சதவீதத்தை பட்டாசு ஆலை உரிமையாளர் வழங்க வேண்டும்.
இதற்கு பொறுப்பு அரசின் தலைமை செயலாளர். மாவட்ட மாஜிஸ்திரேட்டான கலெக்டர் மூலமாக வழங்க வேண்டும். மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு சரியான வாரிசுதாரர்களுக்கு போய் சேர்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறாக தீர்ப்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
2021க்கு பிறகும் நிறைய விபத்துக்கள் நடந்து விட்டன. தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு படி இழப்பீடு வழங்காமல் அரசு தாமதித்து வந்தது. இதனால் வாரிசுதாரர்கள் வறுமையில் வாடி வந்தனர்.
இந்நிலையில் ஜூலை 11ல் ரூ.5 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டதாக பசுமை தீர்ப்பாய நீதிமன்றத்தில் தமிழக அரசு தற்போது வந்த விசாரணையில் தெரிவித்தது. இதையடுத்து 45 நாட்களுக்குள் விருதுநகர் கலெக்டர் சரியான பயனாளிகள், வாரிசுதாரர்களை தேர்வு செய்து இழப்பீடு வழங்கியிருக்கவேண்டும் என அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணா, நிபுணர் உறுப்பினர் சத்ய கோபால் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தற்போது 45 நாட்கள் கடந்தும் தற்போது வரை பயனாளிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படாமல் உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் தொடர் அலட்சியமே இதற்கு காரணம் என்கின்றனர். இறந்தோரின் வாரிசுதாரர்கள், காயமடைந்தோர் தினமும் நொந்து வேதனையை அனுபவித்து வருகின்றனர். எனவே விரைந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.