ADDED : ஜன 30, 2026 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி ஜேசீஸ் மெட்ரிக் பள்ளியில் ரோட்டரி கிளப் சிவகாசி சுப்ரீம் சார்பில் 5 ம் ஆண்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கபடி போட்டி நடந்தது. அசோகன் எம்.எல்.ஏ., பள்ளி முதல்வர் சித்ரா ஜெயந்தி தலைமை வகித்தனர்.
ரோட்டரி கிளப் தலைவர் சரவண பிரகாஷ், செயலாளர் முனீஸ் பாண்டி, திட்ட தலைவர் சங்கரன், திட்ட துணைத்தலைவர் பாண்டியராஜ் முன்னிலை வகித்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தது.

