ADDED : ஜன 08, 2026 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசியில் விருதுநகர் மாவட்ட பாடி பில்டர்ஸ் வெல்பேர் சொசைட்டி சார்பில் மாவட்ட அள விலான ஆணழகன் போட்டி நடந்தது.
இப்போட்டியில் விருது நகர், சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, ராஜ பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று தங்களது கட்டுமஸ்தான உடலை வெளிக்காட்டி திறமைகளை வெளிப் படுத்தினர். 50 முதல் 75 கிலோ வரையிலான 9 எடை பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது.
சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அதிக புள்ளிகளை பெற்ற சிவகாசி பிரண்ட்ஸ் ஜிம் வீரர்கள் மிஸ்டர் விருதுநகர் பட்டத்தை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

