ADDED : ஜூலை 08, 2012 10:53 PM
விருதுநகர் : இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ஜூலை 22முதல் 25 வரை நடக்கவுள்ளது.
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள் விமானப்படை தேர்வில் கலந்து கொள்ளலாம்
கல்வித்தகுதி: பிளஸ் 2, இண்டர்மீடியட் படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல்
பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண்கள்
பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்கில்
மெக்கானிக்கல், எலக்டரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர்
சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவுகள் மட்டும்
குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 22 காலை 6 மணியிலிருந்து 10 மணிக்குள் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ்2 , டிப்ளமோ, மார்க்ஷீட், என்.சி.சி.,
சான்றிதழ்கள், மேற்படிப்பிற்காக கல்லூரியில் சான்றிதழ்கள்
பெறப்பட்டிருந்தால், சான்றிதழ் நகலில் அட்டஸ்டட் பெற்று வரலாம்.
கல்லூரியில் சான்று இருக்கிறது என நிரூபிக்க கல்லூரி முதல்வரிடம் சான்று
பெற்று வர வேண்டும்.
பென்சில், ரப்பர், ஷார்ப்னர், கருப்பு, நீல நிற பால்பாய்ண்ட் பேனா கொண்டு
வர வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தும் மூன்று நகல்கள்,இரண்டு வெள்ளை கவர்கள்
கொண்டு வரவேண்டும். தமிழகம், புதுச்சேரியில் படிக்காதவர்கள் மட்டும்
இருப்பிட சான்று பெற்று வர வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கலர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, உடற்திறன் தேர்வுக்கு விளையாட்டு உடை, ஷார்ட்ஸ், ஷீவுடன் வர வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தீதீதீ.டிணஞீடிச்ணச்டிணூஞூணிணூஞிஞு.ணடிஞி.டிண,
ச்ண்ஞிtச்ட்ஞச்ணூச்ட்÷ஞ்ட்டிடூடூ.ஞிணிட் என்ற இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.
