ADDED : ஆக 20, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் 12 குறுவட்டங்களில் நடந்த போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான மாவட்ட சிலம்ப போட்டி நடந்தது.
வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரி செயலாளர் சம்பத்குமார், உடற்கல்வி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பங்கேற்றனர். 500க்கும் மேற்பட்ட 14, 17, 19 வயதிற்குட்பட்ட இருபாலர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர் அடுத்த மாதம் திருநெல்வேலியில் நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.
