ADDED : ஜூலை 12, 2025 04:00 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மங்காபுரம் ஹிந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில், காமராஜரின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நாடார் மகாஜன சங்கத்தின் சார்பில் நடந்தது.
இதில் 6,7,8 வகுப்பிற்கு ஒரு பிரிவாகவும், 9, 10 வகுப்பிற்கு ஒரு பிரிவாகவும், 11,12 வகுப்பிற்கு மற்றொரு பிரிவாகவும் நடந்த போட்டியில் 603 மாணவர்கள் பங்கேற்றனர்.
முதல் பரிசு ரூ. 7 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.5 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 3 ஆயிரம் என 18 நபர்களுக்கு ரொக்க பரிசு, சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மங்காபுரம் உறவின்முறை தலைவர் ராமசுப்பிரமணியன், பள்ளி செயலாளர் பாலசுந்தரம், பொருளாளர் பிரபாகரன் முத்துராஜ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாடார் மகாஜன சங்க மாவட்ட செயலாளர் ஜெயராஜ், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.