/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீபாவளி பட்டாசு விற்பனை சிவகாசியில் களை கட்டுது உற்பத்தி குறைந்ததால் பற்றாக்குறைக்கு வாய்ப்பு

ADDED : அக் 09, 2025 03:08 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு விற்பனை களை கட்டி வருகிறது. அதிகாரிகளின் ஆய்வால் பட்டாசு ஆலைகள் மூடல், அவ்வப்போது பெய்த மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு 10 சதவீதம் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
விருதுநகர் சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. 4000 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன.
இந்த தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தி சதவீதம் குறைந்ததால் மக்கள் விரும்புகின்ற வெரைட்டி பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியவில்லை.
ஆனாலும் பட்டாசு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகின்றது. தீபாவளிக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் வெளி மாநில, வெளி மாவட்ட வியாபாரம் முடிந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் இருந்து சிறு வியாபாரிகள், மக்கள் பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு வந்துள்ளனர். இதனால் தற்போது பட்டாசு வியாபாரம் களைகட்டி வருகிறது. அதே சமயத்தில் 5 முதல் 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
இளங்கோவன், தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர்: மழை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 10 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் பட்டாசுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.