ADDED : மார் 28, 2026 05:28 PM
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்துார், ராஜபாளையத்தில் தி.மு.க.,வும், சிவகாசியில் காங்., விருதுநகரில் தே.மு.தி.க., ஸ்ரீவில்லிப்புத்துாரில் இந்திய.கம்யூ., ஆகியவை போட்டியிடுகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான தி.மு.க., வேட்பாளர்கள், அதன் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் அமைச்சர் சாத்துார் ராமசந்திரன், திருச்சுழியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ராஜபாளையத்தில் எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
மேலும் சாத்துாரில் தி.மு.க., வேட்பாளராக கடற்கரை ராஜ் போட்டியிடுகிறார். இவர் 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆர்.பி., உதயகுமாரை எதிர்த்து தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
மாவட்ட மூத்த அமைச்சரின் தீவிர விசுவாசியாக இருப்பதால் தற்போதும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவகாசியில் காங்., விருதுநகரில் தே.மு.தி.க., ஸ்ரீவில்லிப்புத்துாரில் இந்திய கம்யூ., ஆகியவை போட்டியிடுகின்றனர்.
