ADDED : ஜன 28, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது.
எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், விருதுநகர் எம்.எல்.ஏ., சீனிவாசன், நகராட்சி சேர்மன் மாதவன், தி.மு.க., நகரச் செயலாளர் தனபாலன், விருதுநகர் ஒன்றியத் தலைவர் சுமதி ராஜசேகர் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி நாடு முழுவதும் வெற்றி பெறும். டில்லியில் அமர்ந்து கொண்டு தமிழ் மொழியை அழிக்க பிற மொழியை திணித்து விடலாம் என எண்ணுபவர்களின் எண்ணம் என்றும் நிறைவேறாது. தெற்கில் இருந்து எழும் சுடர் ஒளி டில்லியை ஆட்சி செய்யும் பா.ஜ., வை மாற்றும், என்றார்.