தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ எதிர்கால தலைமுறையினருக்கும் தி.மு.க., அரசு உறுதுணையாக இருக்கும்

 எதிர்கால தலைமுறையினருக்கும் தி.மு.க., அரசு உறுதுணையாக இருக்கும்

 எதிர்கால தலைமுறையினருக்கும் தி.மு.க., அரசு உறுதுணையாக இருக்கும்


ADDED : பிப் 26, 2026 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நரிக்குடி: இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல எதிர்கால தலைமுறைக்கும் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு தி.மு.க. அரசு என்றும் உறுதுணையாக இருக்கும், என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

நரிக்குடியில் நடந்த தி.மு.க.பொதுக்கூட்டத்தில் அமைச்சர்

தங்கம் தென்னரசு பேசியதாவது: விடியல் பயணம் தொடங்கி, மகளிர் உரிமைத் தொகை வரை தமிழக பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியவர் முதல்வர் ஸ்டாலின். அதன் காரணமாக தி.மு.க., மீது தமிழக மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். தொலைநோக்கு பார்வையுடன் முன்கூட்டியே ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வாழ்வாதாரத்தை காத்தார். 2026ல் தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும் மகளிர் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வாக்குறுதி அளித்துள்ளார். திருச்சுழி தொகுதிக்கு தேவையான எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி ஐந்தாண்டு கால ஆட்சியில் உயர்கல்வியை ஊக்குவிக்க புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு தாயுமானவர் திட்டம், நலம் காக்கும் திட்டம் என கொண்டு வந்தார். இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல எதிர்கால தலைமுறைக்கும் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us