/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனைகள்; தொகுக்கும் பணிகளில் அரசு அலுவலர்கள்; அரசு பணிகள் பாதிப்பு

ADDED : ஜூன் 03, 2025 06:59 AM
விருதுநகர்: தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனைகளை அரசின் துறைகள் வாரியாக மாவட்டங்கள் தோறும் தொகுத்து அதிகாரிகள் மூலமாக செய்தியாக வெளியிடும் பணிகள் நடக்கிறது. இதனால் துறை ரீதியான பணிகள் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் குமுறுகின்றனர்.
வேளாண்மை, கால்நடை, மருத்துவம், சுகாதாரம், சமூக நலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுப்பணித்துறை என அரசின் பல்வேறு துறைகளில் மாவட்டங்கள் வாரியாக கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த பணிகளை தொகுக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
அவற்றை துறை அதிகாரிகளால் விளம்பர பதாகைகள், செய்திகளாகவும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவற்றில் விவசாயிகள், பெண்களை கவரும் வகையிலான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்களின் துறைகளின் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புலம்புகின்றனர்.