ADDED : ஜன 26, 2026 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட் டத்தில் பிப்., 7ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., இளைஞரணி தென்மண்டல மாநாடு நடக்கிறது.
இதற்கான முன்னேற் பாடுகள் குறித்த நிர் வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது.
மாநில இளைஞரணி அமைப்பாளர்கள் ராஜா, இக்பால், எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், தங்க பாண்டியன், மேயர் சங்கீதா, முன்னாள் எம்.எல்.ஏ., பாலகங்காதரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ்குமார், நகராட்சி தலைவர் மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

