ADDED : ஜூலை 04, 2025 02:44 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பள்ளி அருகே தி.மு.க., பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்காக மேடை அமைத்ததால் பள்ளிக்கு வந்த . மாணவர்கள் அவதியடைந்தனர். பெற்றோர் அதிருப்தியடைந்தனர்.
அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் மாலையில் 6:00 மணிக்கு நடைபெற்ற தி.மு.க., வின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு காலையிலிருந்து பள்ளிக்கு அருகில் மேடை அமைக்கும் பணி நடந்தது. ரோட்டிலேயே சேர்கள், மேடை அலங்காரம் பொருட்களை வைத்து இடைஞ்சல் செய்ததால் பள்ளிக்கு வரும் வந்த மாணவர்கள் உடன் வந்த பெற்றோர் சிரமப்பட்டனர்.
வெள்ளக்கோட்டை சந்திப்பு பகுதியில் தான் எப்போதும் பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். அதை மாற்றி தி.மு.க., வினர் பள்ளி அருகில் நடத்தியதால் போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் பள்ளி மாணவர்களுக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டது. பொதுக் கூட்டம் நடைபெறுவது மாலையில் என்றாலும் கூட காலையில் பள்ளி நேரத்தில் மக்களுக்கு மாணவர்களுக்கும் இடைஞ்சல் செய்யும் வகையில் மேடை அமைத்ததில் நான் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கல்வியை மாணவர்கள் இறுக பற்ற வேண்டும். என முதல்வர் சென்னையில் நடந்த நான் முதல்வன் திட்டத்தில் பேசியுள்ளார். ஆனால் அதற்கு மாறாக அருப்புக்கோட்டை தி.மு.க ., நிர்வாகிகள் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இடைஞ்சல் செய்துள்ளனர்.
போக்குவரத்திற்கும் மக்களுக்கும் இடைஞ்சலான பகுதிகளான இந்தியன் வங்கி, புதிய பஸ் ஸ்டாண்ட், வெள்ளக்கோட்டை சந்திப்பு ஆகிய பகுதிகளில் அனைத்து கட்சிகளும் கூட்டம் போடுகின்றனர். போலீசாரும் இதற்கு அனுமதி தந்து விடுகின்றனர். இதனால் பொது மக்கள் சிரமப்பட வேண்டி உள்ளது. இந்த இடங்களை தவிர்த்து வேறு இடங்களில் கூட்டம் போட இனிமேலாவது மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து, டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வெள்ளக்கோட்டை சந்திப்பில் மேடை அமைக்க அனுமதி தந்தேன். அவர்கள் தள்ளி பள்ளிக்கு அருகில் மேடை போட்டு விட்டனர்.