/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டை நகராட்சியில் குப்பை குவியலாக ஆவணங்கள்
/
அருப்புக்கோட்டை நகராட்சியில் குப்பை குவியலாக ஆவணங்கள்
அருப்புக்கோட்டை நகராட்சியில் குப்பை குவியலாக ஆவணங்கள்
அருப்புக்கோட்டை நகராட்சியில் குப்பை குவியலாக ஆவணங்கள்
ADDED : செப் 25, 2024 03:28 AM

அருப்புக்கோட்டை: முதல் தளத்தில் நகரமைப்பு பிரிவு, நில அளவை பிரிவு, நகர நிலவரி திட்ட அலுவலகம் உட்பட உள்ளது.
:::::
இங்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இடம் தொடர்பான பணிகளுக்கு வந்து செல்வர். ஆனால், மாடி ஏறியதும் முதலில் குப்பை குவியலாக பழைய ஆணவங்கள் ஒழுங்கின்றி சிதறி கிடப்பது தன் கண்ணில் படுகிறது.
மாதக் கணக்கில் வாரண்டா முழுவதும் ஆவணங்கள் போடப்பட்டுள்ளன.
காற்றில் இவை பறப்பதும், மாதக்கணக்கில் கிடப்பதால் எலிகள், அணில்கள் வாழும் இடமாகவும் மாறிவிட்டது.
இவற்றை அப்புறப்படுத்தி சுகாதாரமாக வைத்துக்கொள்வதில் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.
ஊரை எல்லாம் சுத்தம் செய்யும் நகராட்சி தங்கள் அலுவலகத்தை குப்பையாக வைத்துள்ளது.