/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆலங்குளத்தில் குடத்தில் தலை சிக்கிய நாய் மீட்பு
/
ஆலங்குளத்தில் குடத்தில் தலை சிக்கிய நாய் மீட்பு
ADDED : ஜூன் 28, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: ஆலங்குளத்தில் தெரு நாய் ஒரு வீட்டின் வாசலில் இருந்த குடத்திற்குள் உணவு தேடிய போது அதன் தலை குடத்தில் சிக்கியது.
குடத்தில் இருந்து தலையை மீட்க முடியாமல் நிலை தடுமாறிய நாயை கண்ட மக்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் நாய் தலை சிக்கியிருந்த எவர்சில்வர் குடத்தை வெட்டி எடுத்து நாயை உயிருடன் மீட்டனர்.