ADDED : ஜன 25, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: திருத்தங்கல் நாடார் நந்தவனத் தெருவில் நடமாடும் நாய்களால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி திருத்தங்கல் நாடார் நந்தவன தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகின்றனர். இவர்களை ரோட்டில் நடமாடும் நாய்கள் விரட்டிக் கடிக்கின்றது. தவிர டூவீலரில் செல்பவர்களை விரட்டுகையில் அவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். குடியிருப்புவாசிகள் கடைக்கு வருபவர்கள் நாய்களால் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதேபோல் திருத்தங்கலில் பல்வேறு பகுதிகளிலும் அதிக அளவில் தெருநாய்கள் நடமாடுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
