ADDED : செப் 25, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: கலெக்டர் ஷரண்யா அறி செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக மனை மற்றும் விளைநிலங்களின் வழிகாட்டி மதிப்பில் உள்ள முரண்பாடுகளை களையும் வகையில் வரைவு வழிகாட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு மக்கள் பார்வையிடும் வகையில் தாசில்தார், சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள், கருத்துரைகள் இருப்பின், அதை 15 நாட்களுக்குள் கலெக்டர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம், “மதிப்பீட்டு துணைக்குழு, மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), மாவட்டப் பதிவாளர் அலுவலகம், விருதுநகர் பதிவு மாவட்டம் என்ற முகவரிக்கு அஞ்சலிலோ அல்லது நேரிலோ சந்தித்து தெரிவிக்கலாம், என்றார்.
