/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒரு மாதமாக கிடப்பில் வாறுகால் கட்டும் பணி
/
ஒரு மாதமாக கிடப்பில் வாறுகால் கட்டும் பணி
ADDED : செப் 08, 2025 06:27 AM

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் ரங்கா நகரில் வாறுகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் ஒரு மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் குடியிருப்போர் கடும் அவதிப்படுகின்றனர்.
திருத்தங்கல் ரங்கா நகரில் 7 தெருக்கள் உள்ளன. சில மாதங்கள் முன் தெருக்களில் ரோடு அமைப்பதற்காக பணிகள் துவங்கியது.
அப்போது அப்பகுதி மக்கள் வாறுகால் அமைத்த பின்பே ரோடு போட வேண்டும் என பணியை தடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இரு மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் வாறுகால் அமைப்பதற்காக ரூ.99 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. எனவே ஒரு மாதத்திற்கு முன்பு வாறுகால் அமைப்பதற்காக அனைத்து தெருக்களிலுமே பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பின் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இதனால் கழிவுநீர் அனைத்தும் பள்ளங்களில் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. தவிர வீட்டு வாசலில் பள்ளம் தோண்டி இருப்பதால் குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளுக்குள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
விரைந்து வாறுகால் அமைக்கும் பணியை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.