ADDED : அக் 30, 2026 06:54 PM

அ நிறம் | அளவு
சாத்துார்: சாத்துார் வெள்ளக் கரை ரோட்டில்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
சாத்துார் நகராட்சி மூன்றாவது வார்டில் மெஜாரோ கோட்ஸ் காலனியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வாறுகாலில் கலந்து வந்த நிலையில் தற்போது வெள்ளக்கரை ரோட்டில் திருமண மண்டபம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.
குடிநீர் வீணாவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
