தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாதக்கணக்கில் வீணாகும் குடிநீர்

 மாதக்கணக்கில் வீணாகும் குடிநீர்

 மாதக்கணக்கில் வீணாகும் குடிநீர்


ADDED : ஆக 22, 2026 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 11:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாருதி நகரில் மாதக்கணக்கில் வீணாகி வரும் குடிநீரை சேமிக்க வேண்டும். சேதத்தை சரி செய்ய வேண்டும்.

விருதுநகர் கொய்யா தோப்பு வீதிகளின் நுழைவு பகுதியான மாருதி நகரில் குடியிருப்பு முன் குடிநீர் குழாய் உடைந்து மாதக்கணக்கில் லீக் ஆகி வருகிறது. 3 நாட்களுக்கு ஒரு முறை நகராட்சியில் இருந்து இப்பகுதிக்கு குடிநீர் சப்ளை ஆகிறது. ஏற்கனவே கொய்யாத்தோப்பு வீதிகள் உள்ளிட்ட இப்பகுதிகளில் மண் ரோடு தான் உள்ளது. லீக் ஆன நீரில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளை சறுக்கி விழச் செய்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகம் இணைந்து இந்த பைப்லைன் சேதத்தை சரிப்படுத்த வேண்டும். குடிநீர் சிக்கனத்தை பேசும் உள்ளாட்சி அமைப்பு இதில் தீவிரம் காட்டி, வீணாவதை குறைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us