/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
7 ஆண்டுகளாக ஒரே வழித்தடத்தில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள்
/
7 ஆண்டுகளாக ஒரே வழித்தடத்தில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள்
7 ஆண்டுகளாக ஒரே வழித்தடத்தில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள்
7 ஆண்டுகளாக ஒரே வழித்தடத்தில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள்
ADDED : பிப் 17, 2024 04:28 AM
காரியாபட்டி: காரியாபட்டி பஸ் டெப்போவில் டிரைவர்கள், கண்டக்டர்கள் 7 ஆண்டுகளாக பேட்ஜ் மாற்றாமல், ஒரே வழித்தடத்தில் பணி செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி புலம்பி வருகின்றனர். மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டி பஸ் டெப்போ துவங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகின. 19 பஸ்கள் உள்ளன. 54 டிரைவர்கள், 47 கண்டக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். திருச்சி, நரிக்குடி, திருச்சுழி, அ. முக்குளம், விருதுநகர் உள்ளிட்ட வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 7 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வழித்தடத்துக்கான டிரைவர்கள், கண்டக்டர்கள் பேட்ஜ் போடப்பட்டது. அப்போதிருந்து இப்போது வரை பேட்ஜ் மாற்றாமல் அதே வழித்தடத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இதில் ஒரு சில பஸ்கள் அதிகாலை 5:00 மணி முதல் இரவு 10:00மணி வரை இயக்கப்படுகிறது. அதுபோன்ற வழித்தடங்களில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதால் மன உளைச்சல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கண்டக்டர், டிரைவர்கள் பேட்ஜ் அமைப்பதை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் சூழ்நிலையை பொறுத்து ஆண்டிற்கு ஒரு முறையாவது மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் காரியாபட்டி டெப்போவில் 7 ஆண்டுகளாக பேட்ஜ் மாற்றாமல் உள்ளனர். இது குறித்து பலமுறை டிரைவர்கள், கண்டக்டர்கள் மாற்றக் கோரியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாவட்டத்தில் பெரும்பாலான டெப்போக்களில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பேட்ஜ் ஆண்டிற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகின்றனர். இவ்வாறு பேட்ஜ் மாற்றி அமைக்கும் போது மன அழுத்தம் ஏற்படாமல் சீராக பணியாற்றுவதற்கு ஏதுவாக இருக்கும் என்கிற சூழ்நிலைக்கு தான் இவ்வாறு செய்யப்படுகிறது. டிரைவர்கள், கண்டக்டர்களின் மனநிலையை அறிந்து அதற்கு ஏற்ப பேட்ஜ்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.