டிரைவர் பலி
அருப்புக்கோட்டை: தூத்துக்குடி அருகே நாசரேத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் ஹரிஷ் ராலிங்சன், 40, இவர் நேற்று தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி நான்கு வழி சாலையில் அதிகாலை 2:30 மணிக்கு லாரியை ரோடு ஓரத்தில் நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க நான்கு வழி சாலையை கடந்த போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
மெக்கானிக் பலி
ராஜபாளையம்: ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் 46, காளியம்மன் கோயில் எதிரே டூ வீலர் மெக்கானிக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மதுரை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு வெளியே வந்தார். எதிரே மெயின் ரோட்டில் அழகாபுரியை சேர்ந்த முனீஸ்வரன் 21, டூ வீலரில் எதிர்பாரா விதமாக மோதியதில் சம்பவ இடத்தில் வெங்கட்ராமன் (ஹெல்மெட் அணியவில்லை) உயிரிழந்தார். இவருக்கு மனைவி, 6 வயது மகள் உள்ளனர். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் பலி
சாத்துார்: சாத்துார் பெரிய ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி, 63.ஜூலை 10 இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள முள் செடிக்கு தீ வைத்த போது நிலை தடுமாறி நெருப்பில் விழுந்ததில் உடலில் தீக்காயம் அடைந்தார்.மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

