/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்வீஸ் ரோடுகளில் பஸ்கள் பயணிக்க டிரைவர்களை அறிவுறுத்தல் வேண்டும்
/
சர்வீஸ் ரோடுகளில் பஸ்கள் பயணிக்க டிரைவர்களை அறிவுறுத்தல் வேண்டும்
சர்வீஸ் ரோடுகளில் பஸ்கள் பயணிக்க டிரைவர்களை அறிவுறுத்தல் வேண்டும்
சர்வீஸ் ரோடுகளில் பஸ்கள் பயணிக்க டிரைவர்களை அறிவுறுத்தல் வேண்டும்
ADDED : மே 17, 2025 11:56 PM

தற்போது விருதுநகர் மாவட்டத்தின் வழியாக ராஜபாளையம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு நான்கு வழிச்சாலைகள் உள்ளது. இதன் வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து வருகிறது. ஆண்டு தோறும் வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த நான்கு வழிச்சாலையில் பல்வேறு கிராமங்கள், சிறு நகரங்கள் உள்ளதால், அப்பகுதியில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வசதியாக சர்வீஸ் ரோடுகள் உள்ளது. ஆனால், அதன் வழியாக பஸ்கள் செல்லாமல் அதிக வாகன போக்குவரத்து உள்ள மெயின் ரோட்டில் தான் நின்று செல்கின்றன.
மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் நான்கு வழிச்சாலையில் சிவரக்கோட்டை, கள்ளிக்குடி, கலெக்டர் அலுவலகம், சூலக்கரை, ஆர்.ஆர்.நகர், சாத்தூர் வெங்கடாசலபுரம், படந்தால் விலக்கு, ஏழாயிரம் பண்ணை விலக்கு போன்ற இடங்களில் சர்வீஸ் ரோடுகள் இருந்தும், நான்கு வழிச்சாலையில் தான் பஸ்கள் நின்று செல்கின்றன.
மதுரையில் இருந்து தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வலையங்குளம், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, மாசார்பட்டி போன்ற இடங்களில் சர்வீஸ் ரோடுகள் இருந்தும் நான்கு வழிச்சாலையில் தான் பஸ்கள் நின்று செல்கின்றன.
இதேபோல் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை தற்போது நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், நத்தம்பட்டியில் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் பஸ்கள் நின்று செல்கின்றன. இதனால் மக்கள் ரோட்டை கடந்து செல்லும் போது விபத்திற்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நான்கு வழிச்சாலையில் இன்னும் பணிகள் முழுமை அடையாமலும், போக்குவரத்து துவங்காத நிலையிலும், தற்போதே சிறு, சிறு விபத்துக்கள் நடந்து வருகிறது.
மற்ற நான்கு வழிச்சாலைகளை ஒப்பிடுகையில் ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் தான் அதிக பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் கூடுதல் விபத்து அபாயம் காணப்படுகிறது.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து நான்கு வழிச்சாலைகளிலும் உள்ள சர்வீஸ் ரோடுகளில் பஸ்கள் பயணிக்க அனைத்து பஸ் டிரைவர்களுக்கும் முதலில் அறிவுறுத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு சர்வீஸ் ரோட்டிலும் போக்குவரத்து போலீசார்களை நிறுத்தி, அனைத்து பஸ்களும் சர்வீஸ் ரோட்டில் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதனையும் மீறி நான்கு வழிச்சாலை பிரதான ரோட்டில் நின்று செல்லும் பஸ் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட அரசு நிர்வாகம், போக்குவரத்துக் கழகம், போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.