ADDED : பிப் 18, 2026 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை மாவட்டம் ஏழுமலையை சேர்ந்தவர் மணிகண்டன் 31, கூலித் தொழிலாளி.
இவர் பிப்.16ல் சிவராத்திரி வழிபாட்டிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் இருளப்பசுவாமி கோயிலுக்கு உறவினர்களுடன் வந்துள்ளார். அன்றிரவு 10:00 மணி வரை கோயிலில் இருந்த நிலையில் அதன் பின்பு திரு முக்குளத்தில் தவறி விழுந்து இறந்த நிலையில் மிதந்துள்ளார்.
தீயணைப்பு அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான குழுவினர் அவரது உடலை மீட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

