ADDED : ஏப் 30, 2025 06:33 AM

சிவகாசி; சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி, விருதுநகர் மாவட்ட மதுவிலக்கு, ஆயத் தீர்வை துறை சார்பில் போதை பொருள் உட்கொள்வதினால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பி.எஸ்.ஆர்., கல்விக் குழுமங்கள் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். சாத்துார் டி.எஸ்.பி., நாகராஜ் பேசியதாவது, ஒழுக்கமான வாழ்க்கை, நல்ல பழக்க வழக்கங்கள், ஆரோக்கியமான உடல்நிலைதான் ஒருவரின் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கிறது.
போதை பொருள் என்பது ஒரு தனி நபர் பிரச்சனை அல்ல. இது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக மாறுகிறது. இவ்வாறு அவர் பேசினார். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பெற்றவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் துர்க்கை ஈஸ்வரன், சியாம்லால், பேராசிரியர்கள் செய்தனர்.
