/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தும்பைக்குளம் கண்மாயில் கழிவுநீர்கலப்பதால் சுகாதாரக்கேட்டில் மக்கள்
/
தும்பைக்குளம் கண்மாயில் கழிவுநீர்கலப்பதால் சுகாதாரக்கேட்டில் மக்கள்
தும்பைக்குளம் கண்மாயில் கழிவுநீர்கலப்பதால் சுகாதாரக்கேட்டில் மக்கள்
தும்பைக்குளம் கண்மாயில் கழிவுநீர்கலப்பதால் சுகாதாரக்கேட்டில் மக்கள்
ADDED : மார் 11, 2024 05:07 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள தும்பை குளம் கண்மாயில் கழிவு நீர் கலந்து துர்நாற்றமும், குளித்தால் உடம்பில் அரிப்பும் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் கடைசியில் உள்ளது தும்பை குளம் கண்மாய். இந்தக் கண்மாயை சுற்றி உள்ள கஞ்சநாயக்கன்பட்டி, வெள்ளக்கோட்டை, அண்ணாநகர், ராமசாமிபுரம், காந்திநகர் பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது. பல ஆண்டுகளாக கண்மாய் பராமரிப்பு இன்றி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பெருகி வெளியேற முடியாமலும் கால்வாய்கள் துார்வாரப்படாமலும் உள்ளது. கண்மாயில் உள்ள ஆகாய தாமரைகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது.
கண்மாயில் கழிவுநீர், குப்பைகள், இறந்த நாய்கள், கோழி கழிவுகள் ஆகியவற்றை கொட்டுகின்றனர். செப்டிக் டேங்கில் எடுக்கப்படும் தண்ணீரும் கண்மாயில் கொட்டப்படுகிறது. இதனால் கண்மாய் துர்நாற்றம் அடைந்து 10 கி.மீ., தொலைவிற்கு நாற்றம் இருக்கிறது. கண்மாயை சுற்றியுள்ள மக்கள் துர்நாற்றத்தை சுவாசித்துக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, வைகை, காவிரி, குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராமபாண்டியன் கூறுகையில், கண்மாயில் பல ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மழையில் நிறைந்தும் பராமரிப்பின்றி கண்மாய் தண்ணீர் கெட்டு துர்நாற்றம் வீசுவதுடன், பாசி படர்ந்து உள்ளது. கண்மாயை அசுத்தங்கள் கொட்டும் இடமாக மாற்றி விட்டனர். நகராட்சி கட்டுப்பாட்டில் இருந்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுப்பது இல்லை.

