/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உயர்ந்த ரோடுகளால் வீட்டிற்குள் மழைநீர் வெளிச்சம் தராத மின் விளக்குகளால் அச்சம் விருதுநகர் நகராட்சி 34 வார்டு மக்கள் அவதி
/
உயர்ந்த ரோடுகளால் வீட்டிற்குள் மழைநீர் வெளிச்சம் தராத மின் விளக்குகளால் அச்சம் விருதுநகர் நகராட்சி 34 வார்டு மக்கள் அவதி
உயர்ந்த ரோடுகளால் வீட்டிற்குள் மழைநீர் வெளிச்சம் தராத மின் விளக்குகளால் அச்சம் விருதுநகர் நகராட்சி 34 வார்டு மக்கள் அவதி
உயர்ந்த ரோடுகளால் வீட்டிற்குள் மழைநீர் வெளிச்சம் தராத மின் விளக்குகளால் அச்சம் விருதுநகர் நகராட்சி 34 வார்டு மக்கள் அவதி
ADDED : ஜன 29, 2024 05:03 AM

விருதுநகர்: புதியதாக அமைக்கப்பட்ட ரோடுகள் உயரமாக இருப்பதால் தாழ்வான குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து அவதி, குப்பை சரியாக பெறாததால் சுகாதாரக்கேடு, தெருவிளக்குகள் போதிய வெளிச்சம் இல்லாததால் இரவில் வழிப்பறி நடக்கும் அபாயம் என பல பிரச்னைகளில் தவித்து வருகின்றனர் விருதுநகர் 34 வது வார்டு மக்கள்.
இந்த வார்டில் நடுத்தெரு, பூங்காத்தெரு, பன்னிமாடசாமி கோயில் தெரு உள்ளிட்ட 10 க்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. நடுத்தெருவில் பாதாளச்சாக்கடை அமைக்கும் பணியின் போது உயரம் கூடுதலாக அமைத்தனர். அதன் பின் அமைக்கப்பட்ட ரோடுகளும் முன்பு இருந்ததை விட மேன்ஹோல்களின் உயரத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டது. இப்பகுதியில் பல சந்துகளில் உள்ள வீடுகள் பழமையான வீடுகளாக இருக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் கழிவு நீருடன் கலந்து வார்டின் குறுகிய தெருக்களில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது.
குடியிருப்பு பகுதிகளில் உள்ள பாதாளச்சாக்கடைகளை சரியாக சுத்தம் செய்வதில்லை. வீடுகளுக்கு வந்து குப்பை பெற்று செல்லும் துாய்மை பணியாளர்கள் சரியாக பணி செய்யாததால் தெருவின் ஓரங்களில் குப்பையை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. 18 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குகின்றனர். எல்.இ.டி., விளக்குளில் போதிய வெளிச்சம் இல்லாததால் இரவில் வழிப்பறி சம்பவங்கள் நடக்கும் என வெளியே செல்வதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர்.
இரவு வெளிச்சம் வேண்டும்
மரியரத்தினம், குடும்பத்தலைவி: புதியதாக அமைக்கப்பட்ட எல்.இ.டி., மின் விளக்குள் போதிய வெளிச்சம் தருவதில்லை. அதனால் குறிப்பிட்ட இடைவெளியில் புதிய மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்குகளும் அமைத்தால் இரவில் அச்சமின்றி செல்ல முடியும்.
குப்பை அகற்றுவதில்லை
ராம்குமார், சுயதொழில்: வார்டில் உள்ள வீடுகளில் குப்பையை முறையாக குடியிருப்புகளின் வாசலில் வைக்கின்றனர். அதை பெற்று செல்வதில் துாய்மை பணியாளர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே குப்பையை முறையாக பெற்று செல்ல வேண்டும்.
பள்ளங்களான ரோடுகள்
அம்சவள்ளி, குடும்பத்தலைவி: குடியிருப்பு பகுதிகளில் ரோடுகள் உயர்ந்ததால் தாழ்ந்த குடியிருப்புகளுக்குள் மழை நீர் கழிவு நீருடன் கலந்து வருகிறது. புதியதாக அமைக்கப்பட்ட கான்கீரிட், பேவர் பிளாக் ரோடுகளும் பள்ளங்களாக மாறிவிட்டது.