ADDED : அக் 26, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே இடியும் நிலையில் உள்ள இ சேவை மைய கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதம் அடைந்துள்ளது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ராமானுஜபுரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இ சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் மக்களின் பயன்பாட்டிற்கு வராமலேயே கட்டடம் பூட்டி கிடக்கிறது. ஆண்டுகள் ஆன நிலையில் கட்டடத்தின் சுவர்கள் அனைத்தும் பெயர்ந்து கூரை சேதம் அடைந்து இடியும் நிலையில் உள்ளது. செலவழித்த லச்சக்கணக்கான நிதியும் வீணானது. இதன் அருகிலேயே துவக்கப்பள்ளி உள்ளது. கட்டிடம் வழியாகத்தான் பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்வர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கட்டடத்தை பராமரிப்பு பணி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அல்லது மாணவர்களின் நலன் கருதி கட்டடத்தை இடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

