ADDED : மார் 26, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியின் 33வது வார்டு கிருஷ்ணன் கோவில் தெருவில் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தில் நுாலகம் கட்டுதல், 3வது வார்டு குலாலர் தெரு மெயின் ரோட்டில் பொது நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டுதல் ஆகிய பணிகளுக்கு நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன் தலைமையில் பூமிபூஜை நடந்தது.
துணைத்தலைவர் செல்வமணி, கவுன்சிலர்கள் அய்யாவுபாண்டியன், மாரீஸ்வரி, கமிஷனர் பிச்சை மணி, பொறியாளர் கோமதி சங்கர் பங்கேற்றனர்.