ADDED : ஏப் 05, 2026 08:03 PM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சர்ச்களில் ஈஸ்டர் விழா கொண்டாட்டம், நள்ளிரவு வழிபாடுகள் நடந்தது.
ஈஸ்டர் விழாவை முன்னிட்டு விருதுநகர் சர்ச்களில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, திருஒளி வழிபாடு, இறைவார்த்தை வழிபாடு, ஞானஸ்நான வழிபாடு, ஈஸ்டர் உயிர்ப்பு ஞாயிறு கூட்டுத்திருப்பலி, மறையுரை நடந்தது. ஈஸ்டர் உயிர்ப்பு விழாவில் இயேசு 3ம் நாள் உயிர்த்தெழுதல் நடத்தப்பட்டது.
விருதுநகர் இஞ்ஞாசியார் சர்ச், பாண்டியன் நகர் சவேரியார் சர்ச், நிறைவாழ்வு நகர் ஜெபமாலை அன்னை சர்ச், ஆர்.ஆர்., நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச், கன்னிசேரிபுதுார் சவேரியார் சர்ச், சாத்துார் இயேசுவின் திருஇருதய ஆண்டவர் சர்ச், ஒத்தையால் அற்புத குழந்தை இயேசு சர்ச், காரியாபட்டி அமலோற்பவ அன்னை சர்ச், சிவகாசி லுார்து அன்னை சர்ச், சாட்சியாபுரம் மரியானுஸ் நகர் ஆரோக்கிய அன்னை சர்ச், திருத்தங்கல் அந்தோணியார் சர்ச், மீனம்பட்டி அன்னை தெரசா சர்ச், அருப்புக்கோட்டை சூசையப்பர் சர்ச், தும்முசின்னம்பட்டி வியாகுல அன்னை சர்ச், வடபட்டி அருளானந்தர் சர்ச்களில் திருவிழிப்பு வழிபாடு, ஈஸ்டர் உயிர்ப்பு விழா திருப்பலி, மறையுரை நடந்தது.
இவற்றில் பாதிரியார்கள் அருள் ராயன், தாமஸ், ஜெரி லுாயிஸ், லாரன்ஸ், அந்தோணிசாமி, பீட்டர் ராய், காந்தி சவரிமுத்து, வனத்தையன், ஜோசப் அமலன், ஜான் மார்ட்டின், அற்புத சாமி, பெனடிக் அம்புரோஸ் ராஜ், பால்ராஜ், அந்தோணி பாக்கியம், மரியதுரை, ஜான் கென்னடி, இணை பாதிரியார் பிரின்ஸ், உதவி பாதிரியார்கள் மரிய ஜான் பிராங்க்ளின், தேவராஜ், மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் ஏரோனிமுஸ் ஆகியோர் தலைமையில் பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, ஈஸ்டர் உயிர்ப்பு விழா, திருப்பலி, மறையுரை நடந்தது. மேலும் நேற்று காலை சர்ச்களில் ஈஸ்டர் விழா சிறப்பு திருப்பலி, மாலையில் தேர்பவனியும் நடந்தது.
