ADDED : மார் 21, 2026 07:46 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் தனி சட்டசபை தொகுதியை இந்திய கம்யூ, கேட்பதால் தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் தி.மு.க.வே, களம் இறங்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் தலைமையிடம் வற் புறுத்தி வருகின்றனர். 2021 தேர்தலில் இத் தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்பட்டது போல் தற்போதும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காங் கிரஸ் நிர்வாகிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
இத்தொகுதியில் ஏற் கனவே 2 முறை இந்திய கம்யூ., வெற்றி பெற்றுள்ள தால் இந்த முறை தங் களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இதேபோல் வாய்ப்பு கிடைத்தால் தாங்களும் போட்டியிடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருதுகின்றனர்.
ஆனால், கடந்த முறையே தி.மு.க. ஒதுக்கப்பட்டிருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம் என கருதும் தி.மு.க.வினர் இந்த முறை தி.மு.க.வே நேரடியாக களமிறங்க வேண்டும் என எதிர் பார்க்கின்றனர்.
இந்நிலையில் தி.மு.க. தலைமையிடம் கொடுத்த பட்டியலில் ஸ்ரீவில்லி புத்துார் தொகுதியையும் இந்திய கம்யூனிஸ்ட் கேட்டுள்ளதால் ஸ்ரீவில்லி புத்துார் தி.மு.க., வினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
