UPDATED : நவ 11, 2026 06:27 PM
ADDED : நவ 11, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் தேசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களை பார்வையிட அழைத்துச் செல்லும் கல்விச் சுற்றுலா பஸ்சை கலெக்டர் ஷரண்யா அறி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
திருச்சி என்.ஐ.டி., தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 120 மாணவர்கள் இரண்டு பஸ்களில் கல்விச் சுற்றுலா செல்கின்றனர் .
பொறியியல் படிப்பிலும் சட்டப் படிப்பிலும் ஆர்வம் கொண்டு வகுப்பறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர் .
முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
