ADDED : அக் 26, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி இன்ஸ்டிடியூட் ஆப் பிரிண்டிங் டெக்னாலஜி பாலிடெக்னிக் கல்லுாரியில் சென்னை, தமிழ்நாடு பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் பெற்றோரை இழந்த பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது.
கல்லுாரி முன்னாள் தலைவர் சேர்மராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜா சங்கர் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை முதன்மை செயல் அதிகாரி இளங்கோ நிதி உதவி வழங்கினார்.
இக்கல்லுாரி மற்றும் சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். பாலிடெக்னிக் கல்லுாரியை சேர்ந்த 40 மாணவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் வரை கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் பாலகணபதி, ஆசிரியர்கள் செய்தனர்.

