ADDED : மார் 28, 2026 05:29 PM

சிவகாசி:சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.
நிர்வாகக் குழு தலைவர் ராமமூர்த்தி, தாளாளர் டென்சிங், செயலாளர் சிங்காரவேல், இணை செயலாளர் குணசிங் பிரித்திவிராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர் அபி ரூபன் தலைமை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர் அறிவழகன் முன்னிலை வகித்தார். பி.இ., பி.டெக் எம்.இ, .எம்.டெக், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளைச் சேர்ந்த 1147 மாணவர்களுக்கு ரூ. 2.18 கோடி கல்வி ஊக்கத்தொகை, 45 பி.எச்.டி., மாணவர்களுக்கு ரூ 1.78 கோடி ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விளையாட்டு, கலை , மாணவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கும் பரிசளிக்கப்பட்டது. மேலும் கல்லுாரி காலம் முழுமைக்கும் 100 சதவீதம் வருகையை பதிவு செய்த மாணவர்களுக்கு, இந்திய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்பட்டது.
