/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டில் கவிழ்ந்த முட்டை லாரி
/
ரோட்டில் கவிழ்ந்த முட்டை லாரி
ADDED : டிச 27, 2025 04:29 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே முட்டை லோடு ஏற்றிச் சென்ற மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நாமக்கல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு முட்டை லோடு ஏற்றிக் கொண்டு மினிலாரி நேற்று சென்றது. நாமக்கல் டிரைவர் சுதாகர் 30, லாரியை ஓட்டினார். விருதுநகர் ஆர்.ஆர். நகர் அருகே மதியம் 3:30 மணிக்கு நான்கு வழிச்சாலையில் சென்றபோது முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. டிரைவர் சிறு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லாரியில் இருந்த 60 ஆயிரம் முட்டைகள் ரோட்டில் சிதறி ஆறாக ஓடின. அவ்வழியாக டூவீலரில் சென்றவர்கள் அதில் வழுக்கி விழுந்து காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

