ADDED : மார் 12, 2024 06:01 AM
அ நிறம் | அளவு
காரியாபட்டி : காரியாபட்டி வருவாய் துறை சார்பாக மகளிர் தினம், தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணை தலைமை வகித்தார். தாசில்தார் மாரீஸ்வரன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் செந்தில் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். உதவி தாசில்தார் அய்யாக்குட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
