ADDED : ஏப் 03, 2026 07:06 PM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு:ஸ்ரீவில்லிபுத்துார் தனி சட்டசபை தொகுதி தேர்தல் பார்வையாளர் உதயன் மிஸ்ரா நேற்று காலை எஸ். ராமச்சந்திரபுரம், சுந்தரபாண்டியம், வத்திராயிருப்பு பகுதி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு சாவடிகளை ஆய்வு செய்தார்.
அங்கு காணப்பட்ட ஒரு சில குறைகளை சரி செய்ய அறிவுறுத்தினார். ஆய்வின் போது தாசில்தார் சரஸ்வதி, வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
