ADDED : மார் 20, 2026 05:16 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ்.,கள், செலவின பார்வையாளர்களாக ஐ.ஆர்.எஸ்.,கள், ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர்களாக ஐ.பி.எஸ்.,கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பார்வையாளர்களாகராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதிகளுக்கு உதயன் மிஷ்ரா (94899 85870), விருதுநகர், அருப்புக்கோட்டை தொகுதிகளுக்கு அனுப்குமார் யாதவ் (94899 85872),திருச்சுழிக்கு சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா(94899 85873) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செலவின பார்வையாளர்களாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துாருக்கு சுக்செயின் சிங் (94899 85874), சாத்தூர், சிவகாசிக்கு அனில்குமார் (94899 85875),விருதுநகர், அருப்புக்கோட்டைக்கு நாயன்ஜோதி நாத் (9488985876), திருச்சுழிக்குவாக்மரே ஜெய் (94889 85877) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏழு தொகுதிகளுக்கும்அகிலேஷ் குமார் சவுராசியா (94889 85878) ஒருங்கிணைந்த காவல் துறை பார்வையாளராக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
இவர்கள் நேற்று அந்தந்த தொகுதிகளுக்கு வருகை தந்துள்ளனர்.மக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், ஏழு தொகுதிகள் தொடர்பான தேர்தல் பணிகள் குறித்த புகார்கள் ஏதும் இருப்பின், தேர்தல் பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வாயிலாகவோ, நேரிலோ தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
