ADDED : பிப் 28, 2024 07:19 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் பணி மேற்கொள்ளும் மண்டல அலுவலர்கள், மண்டல உதவியாளருக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசன் தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது. தாசில்தார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் செந்தில்குமார், வத்திராயிருப்பு முத்துமாரி முன்னிலை வகித்தனர். பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல உதவியாளர்களுக்கு விளக்க கையேடு வழங்கப்பட்டது.
