/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின் மோட்டார் பழுது: குடிநீர் சப்ளை பாதிப்பு
/
மின் மோட்டார் பழுது: குடிநீர் சப்ளை பாதிப்பு
ADDED : மார் 22, 2025 05:59 AM
நரிக்குடி: நரிக்குடி கே.புளியங்குளத்தில் மின் மோட்டார் பழுதால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது. மக்கள் சிரமத்தில் உள்ளனர். சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடி கே. புளியங்குளத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர்.
கடந்த 10 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யவில்லை. இதுகுறித்து ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. மின் மோட்டார் பழுதாகி இருப்பதால் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததோடு சரி, கிடப்பில் போட்டனர்.
நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. ஒரு சில நேரங்களில் ஊருக்குள் வரும் தண்ணீர் வண்டியில் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லை.
குடிநீர் சப்ளை இன்றி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். வயதானவர்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் பிடித்து வர முடியவில்லை. மின்மோட்டாரை பழுது நீக்கி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.