/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நடுரோட்டில் மின்கம்பம், செயல்படாத சுகாதார வளாகம் அவதியில் விருதுநகர் மாத்திநாயக்கன்பட்டி ரோடு மக்கள்
/
நடுரோட்டில் மின்கம்பம், செயல்படாத சுகாதார வளாகம் அவதியில் விருதுநகர் மாத்திநாயக்கன்பட்டி ரோடு மக்கள்
நடுரோட்டில் மின்கம்பம், செயல்படாத சுகாதார வளாகம் அவதியில் விருதுநகர் மாத்திநாயக்கன்பட்டி ரோடு மக்கள்
நடுரோட்டில் மின்கம்பம், செயல்படாத சுகாதார வளாகம் அவதியில் விருதுநகர் மாத்திநாயக்கன்பட்டி ரோடு மக்கள்
ADDED : நவ 04, 2024 05:19 AM

விருதுநகர் : நடுரோட்டில் மின்கம்பம், பல ஆண்டுகளாக செயல்படாத சுகாதார வளாகம், மண்மேவிய வாறுகால், தெருவிளக்குகள் பற்றாக்குறை என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் அல்லம்பட்டி மாத்திநாயக்கன்பட்டி ரோடு மக்கள்.
விருதுநகர் அல்லம்பட்டியில் இருந்து மாத்திநாயக்கன்பட்டி ரோட்டில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் நடுரோட்டில் மின்கம்பம் பல ஆண்டுகளாக உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் ரோட்டில் நடுப்பகுதியில் தாழ்வான செல்லும் மின்வயர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இப்பகுதியில் சுகாதார வளாகம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படாமல் சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை இடித்து விட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இப்பகுதியின் வாறுகால்களில் மண் நிறைந்து கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
இங்குள்ள அடிகுழாய் அடிப்பகுதி துருப்பிடித்து முற்றிலும் சேதமாகியுள்ளது. வீடுகளின் குப்பையை கொட்டுவதற்கு தெருக்களில் குப்பைத் தொட்டிகள் இல்லை. இதனால் தெரு ஓரங்களில் குடியிருப்புகளுக்கு அருகே குப்பையை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. ரோட்டின் கடைக்கோடி பகுதிகள் போதிய அளவில் மின் விளக்குகள் இல்லை. பணிமுடிந்து இரவு நேரத்தில் வீடுகளுக்கு திரும்புபவர்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
மாத்திநாயக்கன்பட்டி ரோட்டின் நடுவே உள்ள மின்கம்பத்தால் வாகனங்கள் செல்ல முடியாமல் திண்டாடுகின்றன. இதை இடமாற்றம் செய்யக்கோரி பல முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மின்வயர்கள் தாழ்வாக செல்வதால் கனரக வாகனங்கள் மீது உராய்வு ஏற்பட்டு விபத்து நிகழும் நிலை உள்ளது.
- கண்ணன், குடியிருப்போர்.
இப்பகுதியின் கடைக்கோடி பகுதிகளில் போதிய அளவில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. வாறுகால் மண், குப்பை நிறைந்து கழிவு நீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மைக்கேல்ராஜ், சுயதொழில்.