ADDED : மே 11, 2026 11:28 PM

அ நிறம் | அளவு
நரிக்குடி: நரிக்குடி அழகாபுரியில் உடைந்து விழும் நிலையில் மின் கம்பத்தால் விபத்து அச்சம் உள்ளதால், உடனே மாற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
அழகாபுரி தொடக்கப்பள்ளி, பஸ் ஸ்டாப் அருகே மின் கம்பம் படு மோசமாக, சேதம் அடைந்து, எப்போது உடைந்து விழுமோ என்கிற நிலையில் உள்ளது. இதனருகே பஸ் ஸ்டாப், ரேஷன் கடை, கூட்டுறவு வங்கியும் இருப்பதால் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தால் வாகன ஓட்டிகள், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். விபத்திற்கு முன் சேதம் அடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
